போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். நேற்று மொத்தம் 44 பேர் பல்வேறு புகார்கள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story