மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள், பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 219 மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 875 மதிப்பிலான மானிய தொகையினை நிலம் விற்பவருக்கு கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், தாட்கோ மாவட்ட மேலாளர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, தனிதுணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story