மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 196 மனுக்கள் பெறப்பட்டன.இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story