மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 2 வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று காலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை கமிஷனர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் புகார் மனுக்களை வழங்கினர். அந்த புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டார். கூட்டத்தில் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாநகர குற்ற ஆவண காப்பக உதவி போலீஸ் கமிஷனர் சரவணன், மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.


Next Story