மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 216 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 216 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக குத்தாலம் வட்டத்தைச் சேர்ந்த 61 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். மேலும், சிறப்பு குறைதீர் முகாமில் 80 வயதிற்கு மேற்பட்டமுதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு வேட்டி, சேலை, காய்கனிகள், பழங்களை கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.