மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் 30 பேர் பல்வேறு புகார்களை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காண உத்தரவிட்டார்.


Next Story