மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட 180 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.8 ஆயிரத்து 50 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். முன்னதாக உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.