போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 21 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
கூட்டத்தில் அரக்கோணம் ஜோதி நகரை சேர்ந்த ஜானகி என்கிற 84 வயது மூதாட்டி தன்னுடைய வீடு பிரச்சினை தொடர்பாக புகார் மனு அளிக்க வந்திருந்தார். அவரால் முதல் மாடிக்கு ஏறி வந்து புகார் மனு அளிக்க முடியாத காரணத்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மூதாட்டியிடம் சென்று புகார் மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசுவேசுவரய்யா (தலைமையிடம்), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story