மக்கள் நேர்காணல் முகாம்


மக்கள் நேர்காணல் முகாம்
x

மக்கள் நேர்காணல் முகாம்

நாகப்பட்டினம்

வாய்மேடு

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெய்வநாயகி தலைமை தாங்கினார். தாசில்தார் ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி செந்தில், சத்தியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பஞ்சநதிகுளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரதங்கம் வரவேற்றார். இதில் 75-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் வேதையன், தனி தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் அகிலா நன்றி கூறினார்.

கீழ்வேளூர் ஒன்றியம் 119 அனக்குடி ஊராட்சி சுந்தரபாண்டியம் பகுதியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வருவாய் நீதிமன்ற தனி துணை கலெக்டர் மதியழகன் தலைமை தாங்கினார். திருக்குவளை தாசில்தார் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். அனக்குடி ஊராட்சி தலைவர் மகாலட்சுமி மாதவன் வரவேற்றார். முகாமில் 37 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 50 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன், ஊராட்சி தலைவர்கள் வடக்கு பனையூர் இந்திரா ராமச்சந்திரன், தெற்கு பனையூர் லதா பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் பிரவீணா ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story