மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
விருதுநகரில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச்செயலாளர் சிவ இளங்கோ, இணைச்செயலாளர் ஜெயகணேஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000 வழங்க வேண்டும். விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் கமல்கண்ணன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story