தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்
தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூர்
திருவாரூர்:
திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும், மஞ்சள் பையையும் வழங்கினார். ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பனகல் சாலை நகராட்சி பூங்காவை வந்தடைந்தது.
இதில் மாணவ-மாணவிகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி தடை தொடர்பான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில், துணைத்தலைவர் அமுதா சந்திரசேகர், நகரசபை உறுப்பினர்கள் பிரகாஷ், செந்தில், நகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story