அரிக்கேன் விளக்கேற்றி பொதுமக்கள் போராட்டம்
அரிக்கேன் விளக்கேற்றி பொதுமக்கள் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே திருமலை ராய சமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மேட்டுப்பட்டி கேட் கடைவீதியில் 2013-ம் ஆண்டு அ.தி.மு.க. எம்.பி. நிதியிலிருந்து உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனை சரி செய்ய பலமுறை மனு கொடுத்தம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் அரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்து போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். புதுக்கோட்டை நகரின் நுழைவுப் பகுதியில் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாமல் இருப்பதால் பல்வேறு வழிப்பறி சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் நடைபெறுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story