மூதாட்டிகளிடம் தலா 3 பவுன் சங்கிலிகள் பறிப்பு


மூதாட்டிகளிடம் தலா   3 பவுன் சங்கிலிகள் பறிப்பு
x

மூதாட்டிகளிடம் தலா 3 பவுன் சங்கிலிகள் பறிக்கப்பட்டது.

திருச்சி

சமயபுரம், ஜூன்.21-

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் பழனியப்பா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நளினி வசந்தா (வயது 73). இவர் நேற்று காலை பழுதான மிக்சியை சரி செய்வதற்காக பக்கத்து பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் வெயிலில் ஏன் நடந்து செல்கிறீர்கள், நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் தான் என்றும், வண்டியில் உட்காருங்கள் நான் கடையில் இறக்கி விட்டு செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து சென்றுள்ளார்.

பின்பு கடையில் மிக்சியை சரி செய்ததும் அங்கேயே காத்திருந்த அந்த நபர் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி மூதாட்டியை வண்டியின் பின்னால் உட்கார வைத்து திருச்சி -சேலம் நெடுஞ்சாலையில் நொச்சியத்தை தாண்டி ஒரு இடத்தில் இறக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டான்.

இது குறித்து நளினி வசந்தா மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மனைவி சுசீலா (71). இவர் நேற்று காலை வயலூர்ரோடு குமரன்நகர் 2-வது மெயின்ரோடு 6-வது குறுக்கு சாலை அருகே நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுசீலாவிடம் முகவரி கேட்டுள்ளனர். அப்போது சுசீலா கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் திடீரென பறித்து தப்பி சென்றார். இந்த சம்பவத்தை கண்ட அந்த பகுதியினர் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சங்கிலி பறித்த ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story