பெரகம்பி மின் பகிர்மானம் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம்
பெரகம்பி மின் பகிர்மானம் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம், செட்டிகுளம் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை மின் வட்ட சீரமைப்பு காரணமாக உரிய வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. இதனால் பெரகம்பி மின் பகிர்மானம் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்தை அணுகுமாறு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story