பெரியகுளம் பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தேனி
பெரியகுளம் துணை மின் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் பிரிவு தாமரைக் குளம் பீட்டரில் உயர் அழுத்த மின் பாதையில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பாரதிநகர், கம்பம் ரோடு மற்றும் மூன்றாந்தல் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.
இதேபோல், தேனி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story