பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் பழப் பயிர்கள் சாகுபடி பயிற்சி: மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
ெபரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் பழ பயிர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் வறட்சிக்கேற்ற ஒருங்கிணைந்த பழப் பயிர்கள் சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து மானாவாரி பயிர் சாகுபடி மாதிரி திடல் மற்றும் மாணவர் தொழில் முனைவோர் தொடக்க திட்ட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் பழ ஊட்டச்சத்துப்பை, குடிநீர் பாசன அமைப்பு, பழச் செடிகள் மற்றும் இயற்கை வேளாண் இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.
முகாமில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அனுசுயா, துணை இயக்குனர் தனலட்சுமி ஆகியோர் அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். முகாமில் விவசாயிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழ அறிவியல் துறை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.