பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் தடகளப் போட்டி தொடங்கியது
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் தடகளப் போட்டி தொடங்கியது
தேனி
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் 'பி'மண்டல பிரிவுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 2-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன. குழு போட்டிகளைத் தொடர்ந்து, நேற்று தடகள போட்டிகள் தொடங்கியது. போட்டியை கரூர் வேளாண்மை கல்லூரி சிறப்பு அலுவலர் பாலசுப்ரமணியன், தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா, அரசு முதன்மை கணக்கு அலுவலர் அம்பலவாணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். குழுப் போட்டிகளான பூப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து ஆகிய போட்டிகளில் மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய அணிகள் வெற்றி பெற்றன. மகளிர் கூடைப்பந்து, மகளிர் கோ-கோ ஆகிய போட்டிகளில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story