பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில்வாழை விவசாயிகளுக்கு பயிற்சி


பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில்வாழை விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் வாழை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தேனி

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வாழை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் செல்வராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி சிவா கலந்து கொண்டு தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார்.

வாழையின் பாரம்பரிய ரகங்கள், புதிய மற்றும் கலப்பின ரகங்கள், புதிய சாகுபடி தொழில் நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய மேம்பாட்டு முறைகள் குறித்து செல்வராஜன் பேசினார். மேலும் அவர் வாைழ சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். தேனி மாவட்டத்தில் அதிக அளவில் உற்பத்தியாகும் வாழை ரகங்களின் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சந்தைப்படுத்துதல் குறித்து பேராசிரியர்கள் பேசினர். எடுத்து உரைத்தனர். முடிவில் பழ அறிவியல் துறை தலைவர் சரஸ்வதி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story