பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்புமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
தேனி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தேனி தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். பெரியகுளம் தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், தாலுகா குழு உறுப்பினர் மன்னர் மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது, பஞ்சமி நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி வருபவர்களிடம் இருந்து மீட்டு உரியவர்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. முத்து மாதவனிடம், தங்களது கோரிக்கை குறித்து மனு கொடுத்தனர்.
Next Story