Normal
பெரியகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் கட்டிடம்
பெரியகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
தேனி
பெரியகுளம் நகராட்சி கட்டுப்பாட்டில் ஜெயராஜ் அன்னபாக்கியம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தேசிய நகர்ப்புற நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வெளி நோயாளிகளுக்கான கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் புனிதன், பொறியாளர் சண்முகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் டாக்டர் சாந்தி கணேஷ், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர், அ.தி.மு.க. கவுன்சிலர் குழுத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த கட்டிடம் வருகிற செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story