பெரியாறு கால்வாய் திட்ட நிதி மோசடி வழக்கு: காண்டிராக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு


பெரியாறு கால்வாய் திட்ட நிதி மோசடி வழக்கு: காண்டிராக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை -மதுரை கோர்ட்டு தீர்ப்பு
x

பெரியாறு கால்வாய் திட்ட நிதி மோசடி வழக்கில் காண்டிராக்டருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்தது

மதுரை


கடந்த 1997-ம் ஆண்டில் பெரியாறு-வைகை இணைப்பு கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்காக ரூ.1 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி பணிகள் நடந்தன. இந்த கால்வாய் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ரூ.61 லட்சத்தை ஒப்பந்த நிறுவனத்தினர் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த மணிமொழி, சப் காண்டிராக்டர் தியாகராஜன், சண்முகவேல், மண்டல என்ஜினீயர் சேது, முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தபோதே தியாகராஜனை தவிர மற்ற 4 பேரும் இறந்து விட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், தியாகராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு) பசும்பொன் சண்முகையா நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story