பெரியார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை


பெரியார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 19-ந் தேதி கடைசிநாளாகும்.

கடலூர்

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 20 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொதுத்துறை ஆட்சியியல், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியியல், புள்ளியியல் மற்றும் காணொலிக் காட்சித் தொடர்பியல் ஆகிய இளநிலை படிப்புகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இதில் சுழற்சி ஒன்று மற்றும் இரண்டில் வழங்கப்படுகின்ற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு www.tngasa.in என்ற இணைய வழியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அது மட்டுமின்றி இணையவழியில் விண்ணப்பிக்க வாய்ப்பில்லாத மாணவ-மாணவிகள் பெரியார் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இணையவழியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும். அதனால் கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் சேர விரும்புகின்ற மாணவர்கள், இணையவழியில் விரைந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 9345512405, 9843339363 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.


Next Story