பெரியார் பிறந்தநாள் விழா


தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

ேகாவில்பட்டியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அ.தி.மு.க.

கோவில்பட்டி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் தலைவர் தாமோதரன், யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் அவரது உருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் மத்திய ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜ், வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில், இளைஞரணிச் செயலாளர் விநாயகா ஜி.ரமேஷ், மாநில கலைத்துறை துணைச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் முருகன் மற்றும் பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குலசேகரன்பட்டினம்

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பரமன்குறிச்சி சமத்துவபுரத்திலுள்ள அவரது உருவச்சிலைக்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க. இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்

செந்தில், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ் மறம்றும் பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் உருவச்சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சியினர் சமூகநீதி குறித்த உறுதி மொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி ஊர்வலம் நடத்தினர். தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலையில் தொடங்கிய ஊர்வலம் பெரியார் சிலை முன்பு முடிவடைந்தது. அங்கு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலை கழக பால் பிரபாகரன், தமிழ்புலிகள் கட்சி தாஸ், தமிழர் விடியல் கட்சி சேமா.சந்தனராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் பிரசாத், புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜீத், ஆதித்தமிழர் கட்சி ஊர்க்காவலன், திராவிடர் தமிழர் கட்சி சங்கர், பழனிபாபா மக்கள் முன்னேற்ற கழகம் ஜலால் முகமது, திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் முனியசாமி, ம.தி.மு.க மாநகர செயலாளர் முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story