அ.தி.மு.க.சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
ஜோலார்பேட்டையில் அ.தி.மு.க.சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளை ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஜோலார்பேட்டை நகர செயலாளர் எஸ்.பி.சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் கே.எஸ்.ஏழுமலை வரவேற்றார். மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
விழாவில் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஜோலார்பேட்டை முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ஆர்.ரமேஷ், நகர அவைத் தலைவர் ஜி.கோவிந்தசாமி, நகர மன்ற உறுப்பினர் மேகநாதன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஜோலார்பேட்டை தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கே.ஜி.சுப்பிரமணி, பிரதிநிதிகள் கே.ஜெய்கிருஷ்ணன், ரஜினிகாந்த், ஏசுராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story