பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா


பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரிய தலமாகும். ஸ்ரீவில்லிபுத்தூரில் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்த பெரியாழ்வார் வடபத்ரசயன பெருமாளுக்கு பூஜை செய்து வந்தார். கோவில் நந்தவனத்தில் ஆடிப்பூர நாளில் ஆண்டாள் மகளாக கிடைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி விழா, பெரியாழ்வாரின் அவதார தினமான திரு ஆனி சுவாதி உற்சவ விழா, வடபத்ரசயனர் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செப்பு தேரோட்டம்

விழாவில் 23-ந் தேதி பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆண்டாள் திருக்கோலத்திலும், 24-ம் தேதி வானமாமலை ஜீயர் மண்டபத்தில் கருட சேவையும், 26-ந் தேதி தவழும் கிருஷ்ணர் திருக்கோலத்திலும் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 28-ந் தேதி காலை 7.20 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story