திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்க அனுமதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண் எடுத்து கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கான தேவை உள்ளவர்கள் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரின் சான்று மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம்.
வண்டல் மண் நிலத்தில் சேர்ப்பதனால் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் மேம்படும், நுண்ணுயிர்கள் பெருக்கம் அடையும். மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் மண்வளம் மேம்பட்டு உற்பத்தி திறன் மேம்படும். ஆகவே, விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் என்றளவிலும், ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண்ணும் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு விவரம் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.