உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்: கலெக்டர் தகவல்


உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள்  வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும்:  கலெக்டர் தகவல்
x

உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என தேனி கலெக்டர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், தண்டுவட மரபு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். எனவே இதுவரை ஒப்படைக்காத பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை மாவட்ட நிர்வாகத்தின் www.theni.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story