பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா


பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
x

திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரம் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே ராணிமகாராஜபுரத்தில் உள்ள பெருமாள் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை, புண்யா வாஜனம், பஞ்ச கவ்யம் போன்றவை நடந்தது. பின்னர் சூரிய பூஜை, சூரிய ஹோமம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து புனித நீரால் கோவில் விமான கலசத்திற்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story