பெருமாள்புரம் ஓடைக்கரை இசக்கியம்பாள் கோவில் கொடை விழா


பெருமாள்புரம் ஓடைக்கரை இசக்கியம்பாள் கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெருமாள்புரம் ஓடைக்கரை இசக்கியம்பாள் கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

அரசூர் ஊராட்சி புதுக்கோட்டை பெருமாள்புரம் ஓடைக்கரை இசக்கியம்பாள் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் மங்கள இசையுடன் அம்பாளுக்கு கும்பாபிஷேகமும், இரவு 7மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 2-ஆம் நாள் காலை 9மணிக்கு ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர். காலை 10 மணிக்கு வில்லிசை, பகல் 12மணிக்கு அலங்கார பூஜை, இரவு 7மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிககு இசக்கி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரததுடன் சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.


Next Story