தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் தேசிய பேரவை ஆலோசனை கூட்டம்
தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் தேசிய பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் தேசிய பேரவை ஆலோசனை கூட்டம், தலைவர் தேவதிரவியம் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜேசன் மைக்கேல் தாஸ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. விழாவுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். மற்றும் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது. பள்ளி குழந்தைகளுக்கு காமராஜர் படம் பொறித்த புத்தகப்பைகளையும், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்குவது. தட்டார்மடத்தில் பேரவையின் தலைமை அலுவலகத்தில் இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
பேரவை துணை செயலாளர் டொமினிக், துணைத்தலைவர் அந்தோணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் லிங்கத்துரை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story