பேட்டை ஊர் சபை கூட்டம்
பேட்டை ஊர் சபை கூட்டம்
திருவாரூர்
முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட பேட்டை ஊர் சபை கூட்டம் தலைவர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மீனவர்கள் அமுல்தாஸ், தாவூது ராஜா, மெட்லா, தனுஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன உரிமை அங்கீகாரம் சட்டம் 2006 அறிவிப்பு பலகையை பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் திறந்து வைத்தார். இதில் கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு பொதுச்செயலாளர் காந்திமதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் தொழிசங்க தலைவர் சந்திரசேகர ஆசாத், விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் முருகையன், ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் மற்றும் திரளான மீனவ பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுகன்யா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story