பெத்தாரணசாமி கோவில் குடமுழுக்கு


பெத்தாரணசாமி கோவில் குடமுழுக்கு
x

கருங்கண்ணி பெத்தாரணசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழ்வேளூர் வட்டம் கருங்கண்ணி அய்யனார் கோவில் தெருவில் மொக்காயி அம்மன், பிரமாயி அம்மன் சமேத பெத்தாரணசாமி மற்றும் பெரியாச்சி முன்னோடியான் உள்ளிட்ட சாமிகளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில்களின் குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி, தீபாராதனை, யாகசாலை பிரவேசம் உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து கடங்கள் புறப்பாடாகி கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story