சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தல்
சாத்திக்கோட்டை கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தேவகோட்டை,
பாரதீய ஜனதா கட்சியினர் நகர பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் தேவகோட்டை கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தேவகோட்டை தாலுகா தளக்காவயல் கிராமம் சாத்திக்கோட்டை காலனிக்கு செல்லும் பாதை சாத்திக்கோட்டை கண்மாய் நீர்நிலை புறம்போக்கு வகையைச் சேர்ந்தது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை சமீப காலமாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை தற்போது வேலி அமைத்து உள்ளனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதுசம்பந்தமாக சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே அரசு பொது பாதையை யும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.