பெருந்திரள் முறையீட்டு மனு


பெருந்திரள் முறையீட்டு மனு
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது

சிவகங்கை

எஸ்.புதூர், ஏப்.5-

எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் மலைச்சாமி, செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஒன்றிய சத்துணவு ஊழியர்கள் எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையீட்டு மனுவை வழங்கினர். இதில் வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்களில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி முறையீட்டு மனுவாக வழங்கப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றிய சத்துணவு சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story