துபாயில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு


துபாயில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து காலனிதெருவை சேர்ந்தவர் பாலாஜி என்பவரின் மனைவி பார்வதி. இவர் நேற்று காலை தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கண்ணீர் மல்க அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் பாலாஜி குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய் நாட்டிற்கு ஐஸ் கம்பெனிக்கு கடந்த ஆண்டு வேலைக்கு சென்றார். கடந்த 15-ந் தேதி பேசும்போது தொண்டை வலியாக உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் ஊருக்கு வருவதாக தெரிவித்தார். ஆனால், மறுநாள் அவருடன் வேலை பார்த்த நபர் செல்போனில் தொடர்பு கொண்டு எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தார். எனது கணவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரின் உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும். எங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு அரசின் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story