காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தகோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு


காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தகோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தகோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு அளித்தார்.

ராமநாதபுரம்

கீழக்கரையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- எனக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கீழக்கரையை சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் நான் கர்ப்பமடைந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினேன். மேலும் என்னை வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்தார். தனக்கு பணத்தேவை இருப்பதாக கூறி ரூ.2 லட்சமும் வாங்கினார். அதன்பின்னர் அவர் என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். அவரின் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டபோது என்னை அவரின் குடும்பத்தினர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில் அவருக்கு தஞ்சையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடுகள் நடக்கிறது. இதுதொடர்பாக கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, திருமணம் செய்து கொள்வதாக என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு இப்போது வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருக்கும் அவருடைய திருமணத்தை தடுத்து நிறுத்தி எனக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story