கள்ளக்குறிச்சியில்அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்தி.மு.க அரசை கண்டித்து நடந்தது
கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், தியாகராஜன், மாவட்ட துணை தலைவர் சர்தார்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட செயலாளர் அருள், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பட்டியல் சமுதாய மக்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை மாநில அரசு சம்பந்தப்பட்ட மக்களுக்கு செலவு செய்யவில்லை. மத்திய அரசு ஒதுக்கும் சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்திற்கான துணைத் திட்ட நிதியினை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதும், தங்களது வேறு தேவைக்காகவும் மாநில அரசு செலவு செய்து வருகிறது என்று கூறி, தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கரிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மனுவில் தி.மு.க அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.