மின்சார வசதி கேட்டு மனு
மின்சார வசதி கேட்டு மனு
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்தோப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கச்சிமடம் அருகே அய்யன்தோப்பு பகுதியில் வசித்து வரும் பெண்கள் ஏராளமானோர் தங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் உடனடியாக அய்யன்தோப்பு பகுதியில் மின்சார வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தியும் நேற்று அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனுவை கொடுத்து விட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story