இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு


இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு
x

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.

வேலூர்

கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சி ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கொத்தமங்கலம் ஊராட்சி ஜெ.ஜெ. நகரில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் மின் இணைப்பு, சாலை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். வீட்டு மனை பட்டா கேட்டு 10 வருடங்களாக மனு கொடுத்து வருகிறோம். மாவட்ட கலெக்டரிடம் 3 முறை மனு கொடுத்துள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டும். அல்லது மாற்று இடம் ஏற்பாடு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மனுவை தலைமை இடத்து துணை தாசில்தார் பிரகாசம் பெற்றுக் கொண்டார்.


Next Story