கணவரை மீட்டுத் தரக்கோரி இளம்பெண் மனு


கணவரை மீட்டுத் தரக்கோரி இளம்பெண் மனு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 2:33 PM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி தலைவியிடம் இருந்துகணவரை மீட்டுத் தரக்கோரி இளம்பெண் மனு அளித்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது குடும்பத்தினர் 16 பவுன் நகை, புல்லட் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சீதனமாக கொடுத்தனர். ஆனால் திருமணமான 2 மாதத்திலேயே எனது கணவர் என்னை தாக்கி அடித்து துரத்தி விட்டார். எனது கணவருக்கும், ஊராட்சி தலைவி ஒருவருக்கும் இருக்கும் தொடர்புதான் இதற்கு காரணம் ஆகும். எனது கணவர் மீது அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் என்னையே மிரட்டுகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை ஊராட்சி மன்ற தலைவியிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story