தலித் விடுதலை இயக்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு


தலித் விடுதலை இயக்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
x

சீமானை கைது செய்யக்கோரி தலித் விடுதலை இயக்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

தலித் விடுதலை இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் கிச்சா தலைமையிலான நிர்வாகிகள் இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஈரோட்டில் கடந்த 13-ந் தேதி திருநகர் காலனியில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தை இழிவுப்படுத்தி பேசினார்.

அதைதொடர்ந்து கடந்த 16-ந் தேதி அருந்ததியர் சுய மரியாதை கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பரண்டு, கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 22-ந் தேதி சீமான் மீது கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் சீமான் இன்று வரை கைது செய்யப்படவில்லை. எனவே சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story