சாலை அமைக்க அனுமதி கோரி மலைக்கிராம மக்கள் மனு


சாலை அமைக்க அனுமதி கோரி மலைக்கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 18 March 2023 12:30 AM IST (Updated: 18 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே சாலை அமைக்க அனுமதி கோரி மலைக்கிராம மக்கள் மாவட்ட வன அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அடுத்த சிறுமலை அருகே தாழக்கடைக்கு சாலை அமைக்க அனுமதி கோரி, மலைக்கிராம மக்கள் நேற்று மாவட்ட வன அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சிறுமலையை அடுத்த தாழக்கடையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் வேலைக்காக திண்டுக்கல்லுக்கு வந்து செல்கின்றனர்.

அதேபோல் தாழக்கடை பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்விக்காக தினமும் திண்டுக்கல்லுக்கு தான் வருகின்றனர். ஆனால் இங்கு சாலை வசதி இல்லை. இதனால் வேலைக்கு செல்வோர், மாணவ-மாணவிகள், நோயாளிகள் சிரமப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் சிறுமலை பழையூரில் இருந்து வேளாண்பண்ணை வரை 11 கிலோமீட்டர் சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. அதில் சிறிது தூரம் வனத்துறை கட்டுபாட்டில் வருகிறது. அந்த இடத்தில் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி அளிக்காததால், சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. எனவே சாலை அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு கொடுத்து இருப்பதாக கூறினர்.


Next Story