இரும்புக்கூடாரம் அமைக்க இடவசதி கேட்டு கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு


இரும்புக்கூடாரம் அமைக்க இடவசதி கேட்டு    கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இரும்புக்கூடாரம் அமைக்க இடவசதி கேட்டு கலெக்டரிடம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த கலைமகள் சுடுமண் சிற்பக்குழுவினர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலை முழுமையாக கற்றுக்கொண்டு செய்து வருகிறோம். தற்போது இத்தொழிலில் 91 பேர் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு நாங்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை உலர வைத்து சூளைபோட்டு வேக வைப்பதற்கு போதிய இடவசதி கிடையாது. இதனால் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இரும்புக்கூடாரம் அமைத்துத்தருமாறு விண்ணப்பம் கோரினோம். நாங்கள் கேட்டுக்கொண்டபடியே இரும்புக்கூடாரம் அனுமதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதற்கான இடத்தை எங்களுக்கு தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் மோகன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story