கீழவைப்பார் ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு


கீழவைப்பார் ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில்  சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-  கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
x

கீழவைப்பார் ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்

தூத்துக்குடி

கீழவைப்பார் ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரத்தில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

குடிநீர்

கீழவைப்பார் பஞ்சாயத்து ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் மொத்தமாக கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அவர்கள் அந்த பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சிலர் மட்டும் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு ஒரு குடிநீர் நல்லி மட்டுமே உள்ளது. இதனால் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. ஒரு குடம் தண்ணீர் ரூ.12 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் எங்களுக்கு சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

மணல் குவாரி

விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜோதி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளூர் கட்டுமான தேவைகளுக்கு மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளிக் கொள்ள அனுமதி கேட்டு போராட்டம் நடத்தி வந்தோம். இந்த நிலையில் மந்திகுளம் பகுதியில் மாட்டு வண்டிகள் மற்றும் லாரிகள் மூலம் மணல் அள்ளிக் கொள்ள குவாரிகள் அமைக்கலாம் என்று அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது.

இந்த பகுதியில் மார்த்தாண்டம்பட்டியில் உள்ள மாட்டுவண்டிகளுக்கு மட்டும் கனரக எந்திரம் இன்றி 3 அடி ஆழம் மட்டும் மணல் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும். லாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.


Next Story