பாளையங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; கலெக்டர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு


பாளையங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்; கலெக்டர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு
x

பாளையங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி வார்டு உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே பாளையங்கோட்டை ஊராட்சியில் தலைவராக அழகுமலையும், துணைத்தலைவராக தெய்வலட்சுமியும் உள்ளனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் காயத்ரி, சீனியம்மாள், முனிசெல்வம் உள்பட 6 வார்டு உறுப்பினர்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாளையங்கோட்டை ஊராட்சி துணைத்தலைவர் தெய்வலட்சுமி சரிவர அலுவலகத்துக்கு வருவதில்லை. அலுவலக பணிகளை முறையாக கவனிப்பதில்லை. வார்டு உறுப்பினர்களை மதிப்பதில்லை. வார்டில் நடக்கும் அனைத்து பணிகளிலும் அவருடைய கணவர் தலையீடு உள்ளது. எனவே அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஏழுமலையான் ஆகியோரிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் மனு கொடுத்தனர்.


Next Story