ஏனாதிமங்கலம்தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி 28-ந்தேதி பா.ம.க. போராட்டம்சிவக்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு


ஏனாதிமங்கலம்தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி 28-ந்தேதி பா.ம.க. போராட்டம்சிவக்குமார் எம்.எல்.ஏ., கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)

ஏனாதிமங்கலம் தென் பெண்ணையாறு மணல் குவாரியை மூடக்கோரி வருகிற 28-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என கலெக்டரிடம் சிவக்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்

விழுப்புரம்


மயிலம்,

விழுப்புரம் மாவட்ட பா.ம.க. சார்பில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு மூலம் மணல் குவாரி திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு ஏனாதிமங்கலம் கிராம எல்லைக்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்ட நிலையில் அரசு அனுமதித்த அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்க்கு நீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

ஆகவே மீண்டும் அப்பகுதியில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளதால் இனி வருங்காலங்களில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்க்கு நீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமாகும். எனவே ஏனாதிமங்கலம் மணல்குவாரியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், மணல் குவாரியை மூடக்கோரி வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) அன்று விழுப்புரம் மாவட்ட பா.ம.க. சார்பில் எனது தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மிகப் பெரிய அளவில் மணல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story