காட்டன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க மனு


காட்டன் சூதாட்டத்தை தடுக்க  நடவடிக்கை எடுக்க மனு
x

காட்டன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

காட்டன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ச.பிரபு, கலெக்டர் அமர்குஷ்வாஹாவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகள் அன்றாட கூலி தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதிகளாகும். இவர்களிடம் ஆசைவார்த்தைகளை காட்டி ஒரு கும்பல் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. இந்த சூதாட்டத்தை தடுத்த நிறுத்த வலியுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல்வேறு காவல்துறை அதிகாரிகளிடம் ஆதாரத்தோடு பலமுறை புகார் தெரிவித்தும், இன்று வரை சூதாட்டம் தடுத்து நிறுத்தப்படவில்லை. புகார் கொடுக்கும் போதெல்லாம் சிலர் மீது சிறு வழக்குகள் மட்டும் பதிவு செய்து அன்றே அவர்களை ஜாமீனில் வெளிவரும் வழக்கில் கைது செய்து விடுவிக்கிறார்கள்.

எனவே சட்டவிரோத சூதாட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story