சீமான் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு


சீமான் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 23 Feb 2023 3:20 AM IST (Updated: 23 Feb 2023 3:24 AM IST)
t-max-icont-min-icon

சீமான் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் அரசியல் கட்சியினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன், ம.தி.மு.க. பகுதி செயலாளர் மணப்படைமணி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர் நயினார்முகமதுகடாபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் முத்துவளவன், தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பப்பாண்டியன் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் இனமக்களை இழிவாக பேசியுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி பேசிய சீமான் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் அவர் பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். நெல்லைக்கு சீமான் வரும்போது அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளனர்.


Next Story