சங்கரன்கோவிலில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு


சங்கரன்கோவிலில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் மனு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்கக்கோரி அமைச்சரிடம் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் 2-வது பெரிய நகராமாக சங்கரன்கோவில் உள்ளது. எனவே சங்கரன்கோவிலில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். சங்கரன்கோவிலில் சார்பதிவாளர் அலுவலகம் பல ஆண்டுகளாக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு இட பற்றாக்குறையால் பத்திரம் பதிய வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடமும், வணிகவரித்துறை அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அதற்கு புதிய கட்டிடமும் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்று கொண்ட அமைச்சர், இதுகுறித்து உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


Next Story