பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜெயக்குமார் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அதில் புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு என்பது 1.1.2023 முதல் வழங்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2022 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கியது. தமிழ்நாடு மாநில அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு புத்தாண்டு தினத்தன்று ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அகவிலைப்படி உயர்வை 1.7.2022 முதல் வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட முன்வர வேண்டும். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிட வேண்டும் என ஆசிரியர்கள் மட்டும் அரசு ஊழியர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.